நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பகாட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள்: புத்ராஜயா, கோலாலம்பூர் உட்பட 4 மாநிலங்களில் உணரப்பட்டன

ஜொகூர்பாரு:

நேற்று மாலை ஜொகூரின் பத்து பகாட் கடற்பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கத்தால், நான்கு மாநிலங்கள், புத்ராஜயா, கோலாலம்பூரில் அதிர்வுகள் உணரப்பட்டன.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.

அதன்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பத்து பகாட்டிலிருந்து சுமார் 27 கி.மீ தென்மேற்கே, 10 கி.மீ ஆழத்தில், 1.7 டிகிரி வடக்கு, 102.7 டிகிரி கிழக்கு என்ற ஆயக்கூறுகளில் அமைந்திருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset