நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் டாமாய் பெர்டானாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நிலச் சரிவுப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு

செராஸ்:

செராஸ், பண்டார் டாமாய் பெர்டானாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் சரிவுப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள், கட்டிடத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வெளியேற உத்தரவிடப்பட்டனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பர் இதனை கூறினார்.

டாமாய் பெர்டானா அடுக்குமாடிக் குடியிருப்புகளின் 'டி' பிளாக் அருகே நடந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 9.03 மணிக்குத் தமக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.

பண்டார் துன் ஹுசைன் ஒன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் எட்டு நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தது.

நிலத்தடி நீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எங்கள் பணியாளர்கள் நிலத்தில் மேலும் எந்த அசைவையும் கண்டறியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் இன்னும் பாய்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட சரிவின் உயரம் சுமார் 4.57 மீட்டர் (மீ) என்றும், இடிந்து விழுந்த நிலத்திற்கும் பாதிக்கப்பட்ட பகுதிக்கும் இடையிலான தூரம் சுமார் 0.91 மீ என்றும் அஷ்ருல் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள, குறிப்பாக 'ஏ' பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களை, தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset