செய்திகள் இந்தியா
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
புது டெல்லி:
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் வெள்ளத்தால் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையைத் தொடர்ந்து ஏழு முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
இம்மாதம் இந்தியாவின் வடமா நிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளம் பெருகியது.
இதுவரை 20 பேர் மாண்டுள்ளனர்.
பெருமளவிலான விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
13 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூகச் சமையலறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 1,800 படகுகள் உதவுகின்றன.
800 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சிலர் வீடுகளின் கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உணவும் பாதுகாப்பான குடிநீரும் கிடைக்காமல் சிரமப்படுவதாகக் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
