நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் அடித்தார்.

சொந்த அரங்கில் களமிறங்கிய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் இவ்வாட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வணியின் தோல்வி அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

மற்றொரு ஆட்டத்தில் பிரிக்டோன் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் கோவென்ரி சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset