நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது 

சென்னை: 

1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்த முயன்ற 62 வயது மலேசிய ஆடவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் 

ஆகஸ்ட் 31-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து வந்த விமானப் பயணியை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மறித்துச் சோதனையிட்டதாகக் சென்னை சுங்கத்துறை  கூறியுள்ளது.

சுங்க அதிகாரிகளிடம் எந்தப் பொருட்களையும் அறிவிக்காமல், விமான நிலையத்தின் 'கிரீன் சேனல்' வழியாகத் தப்ப முயன்றபோதே அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரது பயணப் பெட்டியை விரிவாகச் சோதனையிட்டபோது, அதன் பொய் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிப்படையான காற்றுப் புகாத பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தப் பொட்டலங்களில் 3,452 கிராம் எடையுள்ள காய்ந்த பழுப்பு-பச்சை நிற தாவரப் பொருட்கள் இருந்தன, அவை கஞ்சா என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவின் 1985-ஆம் ஆண்டின் போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகள் சட்டத்தின் கீழ் அந்தப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சென்னை சுங்கத்துறை தெரிவித்தது 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மலேசியர் ஒருவர் சென்னைக்கு 'ஹைட்ரோபோனிக்' கஞ்சாவைக் கடத்த முயன்று கைதாவது இது இரண்டாவது சம்பவமாகும்.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, பேராக்கைச் சேர்ந்த 54 வயது மலேசிய ஆடவர் ஒருவர் 4.03 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் இதே சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பாங்காக்கிலிருந்து வந்த அந்தப் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தாய்லாந்திலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுவதாக புக்கிட் அமான் உறுதிப்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset