நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 

சென்னை: 

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொகுதியில் பதிவான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட வி.எஸ். பாபு மகத்தான வெற்றிப்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 14 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset