செய்திகள் தமிழ் தொடர்புகள்
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
சென்னை:
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
‘2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 2 குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயா்த்தப்படுகிறது.
கடந்த 2026 மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், 2-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
சட்ட பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் சரத்குமாா் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு 3-ஆவது குழந்தைக்காக தற்போது வழங்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பு, 365 நாள்களாக உயா்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த விடுப்பு முழு ஊதியத்துடன் வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு காலம், குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஓய்வு காலம் முதல் குழந்தை பிறந்த பிறகு உடல்நலம் தேறும் காலம் வரை, அரசு பெண் ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
August 30, 2026, 9:40 pm
தமிழகத்தில் செப்.3 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி வரை உயரும்: சென்னை வானிலை நிலையம் அறிவிப்பு
August 26, 2026, 8:18 pm
அரசுப் பள்ளியின் காலை உணவில் பல்லி: உணவு சமைத்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
August 25, 2026, 10:02 pm
