நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தயம்: மேலும் மூவரைப் போலிஸ் கைது செய்தது 

கூலாய்: 

கடந்த சனிக்கிழமை ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களைப் போலிஸ் கைது செய்துள்ளது. 

சமூக ஊடகத்தில் வைரலான இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலிஸ் தலைவர் டான் செங் லீ கூறினார். 

கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத் தடுப்புக் காவல் ஆணைக்காக கூலாய் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவர்

இந்த சம்பவம் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 42(1)இன் கீழ் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் சொன்னார். 

முன்னதாக, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஒரு நபர்  உட்பட எட்டு நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

26 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்த எட்டு சந்தேகநபர்களுக்கும் நான்கு நாட்கள் தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset