செய்திகள் மலேசியா
கோலா நெருஸில் விடியற்காலை ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும் அவரது ஒன்பது வயது மகனும் உயிரிழந்தனர்
கோலா நெருஸ்:
இன்று அதிகாலை கம்போங் டோக் ஜெம்பால் (Kampung Tok Jembal) பகுதியில் ஏற்பட்ட வீட்டுத் தீ விபத்தில், தந்தையும் அவரது ஒன்பது வயது மகனும் உயிரிழந்தனர்.
கோலா திரெங்கானு மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முஹம்மது நூர் இன்று வெளியிட்ட அறிக்கையில், டோக் ஜெம்பால் தேசியப் பள்ளிக்கு (Sekolah Kebangsaan Tok Jembal) அருகிலுள்ள இரு மாடி அரை-நிரந்தர (semi-permanent) வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அதிகாலை 4 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
கோலா நெருஸ், கோலா திரெங்கானு தீயணைப்பு, மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 16 பணியாளர்கள், 40 வயதுடைய அந்த நபரையும் அவரது மகனையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறினார். அவர்கள் தீ விபத்தில் இறந்துவிட்டனர் என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளதாக அஸ்லி தெரிவித்தார்.
- பெர்னாமா
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 9:11 am
புகைமூட்டம் மோசமடைவதால் பினாங்கு பள்ளிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன
August 25, 2026, 11:59 pm
ஷா ஆலாமில் பயங்கர கைகலப்பு: ஓர் ஆடவர் கைது, சந்தேக நபர் மரணம்
August 25, 2026, 1:58 pm
