செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் 16 பகுதிகளில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் காற்றின் தர குறியீடு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகி வருகிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 16ஆக குறைந்துள்ளது.
நேற்று இதே நேரத்தில் 30 பகுதிகளாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது வெகுவாகச் சரிவடைந்துள்ளது
ஐந்து மாநிலங்கள் மற்றும் இரண்டு கூட்டரசு பிரதேசங்களில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் இந்தச் சுகாதாரமற்ற நிலை பதிவாகியுள்ளது.
இதில் சரவாக் மாநிலத்தின் செரியான் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 166ஆக பதிவானது. இதுவே நாட்டின் மிக மோசமான காற்றின் தர பகுதியாக உள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் ஐந்து பகுதிகள் சுகாதாரமற்ற காற்றோட்டப் பிரிவில் பதிவாகியுள்ளன.
ஷா ஆலாம் மற்றும் ஜொஹான் செத்தியா ஆகிய இரு பகுதிகளிலும் 157 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பந்திங் (137), கிள்ளான் (123) மற்றும் பெட்டாலிங் ஜெயா (109) ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 11:23 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தயம்: மேலும் மூவரைப் போலிஸ் கைது செய்தது
August 26, 2026, 10:10 am
கோலா நெருஸில் விடியற்காலை ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும் அவரது ஒன்பது வயது மகனும் உயிரிழந்தனர்
August 26, 2026, 9:11 am
புகைமூட்டம் மோசமடைவதால் பினாங்கு பள்ளிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன
August 25, 2026, 11:59 pm
ஷா ஆலாமில் பயங்கர கைகலப்பு: ஓர் ஆடவர் கைது, சந்தேக நபர் மரணம்
August 25, 2026, 1:58 pm
