நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மலேசியா உட்பட 12 நாடுகள் கண்டனம் 

புத்ராஜெயா: 

சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அபு அல்-துஹூர் வான்வழித் தளத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலுக்கு மலேசியா உட்பட  11 நாடுகள் கூட்டாகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவுடன் இணைந்து துருக்கி, அல்ஜீரியா, இந்தோனேசியா, ஜோர்டன், லெபனான், மௌரித்தேனியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கையை வெளியிட்டன.

சிரியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் ஒற்றுமைக்கு எதிரான அப்பட்டமான மீறலாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுவதாக அமைச்சர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.

இஸ்ரேலின் இந்தத் தொடர்ச்சியான மீறல்கள் பதற்றத்தை மேலும் தீவிரமடையச் செய்யும் என்றும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாசமாக்கும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது. 

சிரியாவுக்கு எதிரான இந்தத் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு எதிராக சர்வதேச சமூகம் உறுதியான, தெளிவான மற்றும் கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் அவர்கள் வலியுறுத்தினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset