செய்திகள் மலேசியா
விபத்தில் காயமடைந்த தம்பதியினருக்கு பகாங் சுல்தான் உதவினார்
கூச்சிங்:
சரவாக்கில் உள்ள பான் போர்னியோ நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினருக்கு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹ்மத் ஷா உதவினார்.
சுல்தான் லுண்டுவிலிருந்து குச்சிங்கிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு காரில் பயணித்த இருவர் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தைக் கண்டார்.
படுகாயமடைந்திருந்த அந்த இருவரையும் சிகிச்சைக்காக லுண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, வாகன அணிவகுப்புடன் வந்த ஆம்புலன்ஸை உடனடியாக அனுப்புமாறு அவர் உத்தரவிட்டார் என்று பகாங் அரண்மனை முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூச்சிங்கிற்கான தனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு, அந்தத் தம்பதியினருக்கு அல்-சுல்தான் அப்துல்லாஹ் உதவினார்.
ஜனவரியில், பகாங் சுல்தான் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவ நிறுத்த ஒப்புக்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக தெமர்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தனது போலிசாருக்கும் பாதுகாப்புப் படைக்கும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
