செய்திகள் மலேசியா
யோங் சோ என்ற புலி அடுத்த மாதம் அதன் பூர்வீக வாழ்விடத்தில் விடப்படும்: ஆர்தர்
சுங்கை:
முதன்முறையாக, ஒரு பெண் புலி அடுத்த மாதத் தொடக்கத்தில் தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திலிருந்து அதன் பூர்வீக வாழ்விடத்தில் விடப்படவுள்ளது.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் இதனை கூறினார்.
கடந்த மாதம் உலு கிந்தாவில் உள்ள சுங்கை சோவில் பிடிக்கப்பட்ட 'யோங் சோ' என்ற அந்தப் புலி, சுதந்திரமாக வாழ்வதற்குப் போதுமான ஆரோக்கியத்தையும் ஆக்ரோஷத்தையும் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த புலியை வரும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அதன் பூர்வீக வாழ்விடத்தில் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்கு களப்பயணத்தை மேற்கொண்ட அவர் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
முன்னதாக கடந்த ஜூலை 22 அன்று, ஈப்போ ஆசிரியர் கல்வி நிறுவன வளாகத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய ஒரு பெண் புலி, வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
