செய்திகள் மலேசியா
வட்டார பதற்றங்களை பேச்சுவார்த்தை, ராஜதந்திரத்தின் மூலம் களைய வேண்டும்: டத்தோஸ்ரீ அன்வாரும், ஷெபாஸும் உறுதி
புத்ராஜெயா:
வட்டார அமைதி, நிலைத்தன்மை பேணப்படுவதை உறுதிசெய்ய, எந்தவொரு பதற்றங்களையும் பேச்சுவார்த்தை, ராஜதந்திரத்தின் மூலம் கவனமாகக் கையாள வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
வட்டாரத்தில் தற்போதைய நிகழ்வுகள், ஈரான்-அமெரிக்க உறவுகளின் வளர்ச்சி குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டபோது, இந்த நிலைப்பாட்டிற்கு அவரும் ஒப்புக்கொண்டார் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
முகநூல் பதிவில், ஷெபாஸுடனான தொலைபேசி உரையாடலின்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாகவும், அவர் பிரதமரின் உடல்நலம் குறித்தும் விசாரித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஈரான்-அமெரிக்க உறவுகளின் வளர்ச்சி குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
மேலும், பதற்றங்களைத் தணிப்பதற்குத் தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.
அனைத்துலக வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய, ஹோர்முஸ் நீர்முனை திறந்தும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
மலேசியாவிற்கான பாகிஸ்தானின் இறைச்சி ஏற்றுமதியை விரிவுபடுத்துவது உட்பட, பெரும் வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்ட வர்த்தகம், பொருளாதார உறவுகளைத் தீவிரப்படுத்துவதற்கான மலேசியா, பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை இந்த உரையாடல் வலுப்படுத்தியதாகவும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
