செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் எண்ணெய் சாத்துதல் வைபவம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும்: டான்ஶ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் எண்ணெய் சாத்துதல் வைபவம் பக்தர்களின் வசதிக்காக இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
தலைநகர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஶ்ரீ கணேச பெருமானுக்கு எண்ணெய் சாத்துதல் வைபவம் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் வரிசையில் நின்று கணேச பெருமானுக்கு எண்ணெய்யை சாத்தி வருகின்றனர்.
அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் எண்ணெய் சாத்துதல் வைபவத்தை இரண்டு நாட்களுக்கு தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.
ஆக பக்தர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி அமைதியுடன் கணேச பெருமானுக்கு எண்ணெய் சாத்தலாம் என்று டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே நாட்டில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயம் விளங்குகிறது.
இதனால் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் செய்துள்ளது.
இருந்தாலும் பக்தர்கள் தங்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
