செய்திகள் மலேசியா
கோத்தா கினாபாலுவில் உள்ள வீடொன்றில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் கருகி பலி
கோத்தா கினாபாலு:
கோத்தா கினாபாலு, மெங்கத்தால், கம்போங் தாராவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர், அவரது மகன் மற்றும் பேத்தி ஆகிய மூவர் உயிருடன் எறிந்து உயிரிழந்தனர்.
பலியானவர்கள் 67 வயதான லூபின் அடோவ், அவரது மகன் அஸ்மான் மடுயின், 50 மற்றும் பேத்தி நூருல் அஷிக்கின் அலினோர், 29 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நூருல் அஷிக்கின் அலினோரின் 34 வயது கணவர் தீக்காயங்களுடன் தப்பினார். அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.43 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இரண்டு அடுக்கு வீடு தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிகாலை 2.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
