செய்திகள் மலேசியா
மலேசியாவில் ‘சூப்பர் எல் நினோ’: வறண்ட வானிலை, புகைப் மூட்டம் அதிகரிக்கும் அபாயம்
கோலாலம்பூர்:
பிராந்தியத்தில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக, மலேசியாவில் வழக்கத்தை விடக் குறைந்த மழையும் வறண்ட வானிலையும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ அர்தர் ஜோசப் குருப், தென்மேற்கு பருவமழை மற்றும் வலுவான எல் நினோ கட்டத்திற்கு நாடு மாறி வருவதாகத் தெரிவித்தார்.
திறந்தவெளி எரிப்புகள் மற்றும் தீப் புள்ளிகள் அதிகரித்தால், இந்த சூழல் புகைப் மூட்ட அபாயத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
நாட்டின் தற்போதைய வானிலை கணிப்புகளின்படி, இந்த "சூப்பர் எல் நினோ" கட்டம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயற்கை வள அமைச்சு, வானிலை ஆய்வுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, கலிமந்தான் மற்றும் சுமத்ராவில் ஏற்படும் தீப் புள்ளிகள் மலேசியாவின் காற்றுத் தரத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், ஆசியான் நாடுகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
