நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள்  56 விழுக்காடு உயர்வு: மலேசிய சுகாதார அமைச்சு எச்சரிக்கை 

கோலாலம்பூர்: 

நாடு முழுவதும் மொத்தம் 58,079 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 56.2% உயர்வாகும்.

 மேலும், இந்த நோயின் தீவிர பக்கவிளைவுகளால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது 

இந்த நோய் பரவல் ஆரம்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது.

இதில் அதிகபட்சமாக சிலாங்கூரில் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை 25,090 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் 15,610 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 61% அதிகமாகும்.

மாறிவரும் வானிலை, மழை மற்றும் வெயில் மாறி மாறி நிலவுவது Aedes கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகிறது.

மேலும், வீடுகளையொட்டிய பகுதிகளில் நீர் தேங்கும் பொருட்கள் முறையாக பராமரிக்கப்படாததே இந்த நோய் விரைவாக பரவுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஈடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் 70% வீடுகளிலேயே கண்டறியப்படுவதால், பொதுமக்கள் வாரத்திற்கு 10 நிமிடங்கள் ஒதுக்கி கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset