செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பு
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவைப் பெற்றுள்ளது.
அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
60 வயதுடைய அந்த நபர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆரஞ்சு நிற சீருடை அணிந்து புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு காலை 9.38 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க அனுமதி அளித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் நாட்டின் பல பிரபல நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த ஒரு முன்னணி தொழிலதிபர் ஆவார்.
இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் உட்பட 7 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கனவே கைது செய்துள்ளது.
2014 முதல் 2020 வரையிலான காலத்தில் தபோங் ஹாஜி அமைப்பின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்து RCI விசாரணை நடத்தியது.
இதில் அந்த அமைப்பின் உண்மையான நிதி நிலைமை மறைக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
முதலீடுகளில் ஏற்பட்ட நஷ்டங்களை கணக்கில் காட்டாமல், தவறான கணக்கு முறைகளைப் பயன்படுத்தி ஆண்டின் லாபப் பங்கீடுகள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அரசியல் தலையீடுகள் மற்றும் நிலையற்ற கொடுப்பனவுகள் இந்த நிதிப் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக இருந்தன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
