செய்திகள் மலேசியா
இஸ்லாம் சமயத்தை அவமதித்த அந்நிய நாட்டு ஆடவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்
ஜொகூர் பாரு:
ஒரு வீடியோ பதிவில் இஸ்லாம் சமயத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக 56 வயதான அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்
கடந்த செவ்வாய்கிழமை மாலை 4.15 மணிக்கு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை சிங்கப்பூர் காவல்துறையின் உதவியுடன் ஜொகூர் பாரு தெற்கு மாவட்டக் காவல்துறை மேற்கொண்டதாக ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் அர்ஷாட் கூறினார்.
சந்தேக நபருக்கு எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என்றும், அவரது முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் விசாரணைக்காகக் கடந்த புதன்கிழமை முதல் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு 1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 மற்றும் பிரிவு 298 இன் கீழ் விசாரணை செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
