நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத்தில் மோசமான புகைமூட்டம்: பாதுகாப்பு காரணமாக 591 பள்ளிகள் மூடல் 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 591 பள்ளிகள் அம்மாநிலத்தில் மூட உத்தரவிடப்பட்டது. 

இன்று காலை 8.30 மணியளவில் காற்றின் தர குறியீடு செரியான் பகுதியில் 241ஆக பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலை காரணமாக பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்தது 

சரவாக்கில் உள்ள மற்ற எட்டு பகுதிகள் ஆரோக்கியமற்ற API அளவீடுகளை பதிவு செய்துள்ளன, அதாவது ஸ்ரீ அமான் (189), கூச்சிங் (186), சமராஹான் (179), சரிகேய் (173), சிபு (156), பிந்துலு (154), சமலாஜு (145) மற்றும் கபிட் (129).

API அளவீடுகள் 0 முதல் 50 வரை நல்லது என்றும், 51-100 மிதமானது என்றும், 101-200 ஆரோக்கியமற்றது என்றும், 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது என்றும், 301-400 ஆபத்தானது என்றும், 401-500 மிகவும் ஆபத்தானது என்றும், 501-க்கு மேல் அவசரநிலை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

முன்னதாக, சரவாக் மாநிலத்தின் 10 மாவட்டங்களின் கீழ் உள்ள 591 பள்ளிகள் புகைமூட்டம் காரணமாக மூடப்படுவதாக சரவாக் மாநில கல்வி இலாகா தெரிவித்திருந்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset