நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் மோதி இரு மிதிவண்டி ஓட்டுநர்கள் பலி: புத்ராஜெயாவில் பரபரப்பு 

புத்ராஜெயா: 

புத்ராஜெயாவில் காரோட்டி மோதியதில் இரு மிதிவண்டி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் கிமீ 9, பெர்சியாரான் செலாத்தான் சாலையில் நிகழ்ந்துள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டி வந்த கார், நடுவரிசையிலிருந்து திடீரென இடது வரிசைக்கு மாறியுள்ளது.

அவ்வாறு மாறும்போது அங்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இருவர் மீதும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

30 மற்றும் 40 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் இருவரும் முகம் மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவம் குறித்து 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சோகச் சம்பவத்தைக் கண்ட சாட்சிகளோ அல்லது தகவல் அறிந்த பொதுமக்களோ விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் 03-8886 2138 என்ற எண்ணில் புத்ராஜெயா போக்குவரத்து காவல் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset