செய்திகள் மலேசியா
கொழும்பு-பினாங்கு நேரடி விமானம் தேவை: பெலிதா கோரிக்கை
கொழும்பு:
இலங்கைக்கான மலேசிய தூதர் துவான் ஹாஜி பத்லி ஹிஷாம் அவர்களை நேரில் சந்தித்த பெலிதா எனும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகள், கொழும்பு-பினாங்குக்கு இடையில் நேரடி விமானம் தேவை என்று வலியுறுத்தினார்கள்
இச்சந்திப்பில் முகமது நசீர் மொஹிதீன், முஹம்மது நபீர், காமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது கொழும்பிலிருந்து மலேசியாவுக்கு வாரத்திற்கு 30 விமானங்கள் இயங்கினாலும், பினாங்கிற்கு நேரடி விமானம் இல்லை. பயணிகள் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூர் வழியாக செல்ல 6 முதல் 19 மணி நேரம் வரை ஆகிறது. நேரடி விமானம் மூலம் 3 மணி நேரத்தில் பயணிக்கலாம். இது சுற்றுலா, மருத்துவம்,வணிகத்திற்கு பெரிதும் உதவும் என்று நசீர் மொஹிதீன் தெரிவித்தார்.
சுற்றுலா வளர்சி:
2024-ம் ஆண்டில் 58,015 இலங்கையர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இது 2019-ஐ விட 122% அதிகமாகும். மலேசியாவின் "Visit Malaysia 2026" பிரச்சாரத்தின் கீழ் இலங்கையிலிருந்து 1 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விசா விவகாரம்:
இலங்கை அரசு மலேசியர்களுக்கு 30 நாட்கள் இலவச சுற்றுலா விசா வழங்குகிறது. மலேசியாவும் இலங்கையர்களுக்கு விசா இல்லா பயணத்தை பரிசீலித்து வருவதாக தூதர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
