செய்திகள் தமிழ் தொடர்புகள்
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று தமிழக பேரவையில் தனித் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
சென்னை:
நீட் தேர்வு, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆா்) திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஆக. 11) அரசு தனித் தீா்மானம் கொண்டு வரப்படுகிறது.
நீட் தோ்வை திரும்பப் பெற்று மாநில மருத்துவப் பாட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீா்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளாா்.
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய பின்பு, குடியரசுத் தலைவரால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
தொடா் நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவா்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவா்களின் நம்பிக்கையை இந்தத் தோ்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தோ்வை அகற்ற வேண்டும் என்று அமைச்சா் அருண்ராஜ் கோர உள்ளாா்.
இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தனித் தீா்மானத்தை பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளாா்.
இந்தத் தீா்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
