செய்திகள் மலேசியா
யாரோ ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள் வியாபாரிகளை பாதிக்கிறது; சட்டத்தை மதியுங்கள்: மிம்தா வேண்டுகோள்
கோலாலம்பூர்:
யாரோ ஒருவர் செய்யும் தவறு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள் வியாபாரிகளை பெரிதும் பாதிக்கிறது.
ஆகவே உலோக பொருள் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரும்பு கடையில் வேலை செய்த தமிழக வேதாரண்யத்தை சேர்ந்த இந்திய தொழிலாளி முத்துகுமார் எப்படி மரணமடைந்தார் என அவரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மலேசிய காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.
இருப்பினும் இதுபோன்ற கொடூர செயல்களை மிம்தா வன்மையாக கண்டிக்கிறது. தமிழக தொழிலாளி தவறு செய்திருந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் நீங்களே சட்டத்தை எடுத்து கொண்டு தண்டனை வழங்க முடியாது.
இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள் மறுசுழற்சி துறையை பெரிதும் பாதிக்கிறது.
போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் நமது வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வருகிறார்கள்.
இவர்களுக்கு அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தர மிம்தா அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராடி வருகிறது.
ஆனால் அந்நியத் தொழிலாளர் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்று கூறப்படும் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது ஒன்று.
ஆகவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சட்டத்தை மதிக்க நடக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
