செய்திகள் மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளி மாணவர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் தற்காப்பு வாதம் புரிய நீதிமன்றம் உத்தரவு
டமான்சாரா:
பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி ஒன்றில் தனது 16 வயதுடைய சக மாணவரைக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் தற்காப்பு வாதம் புரிய ஷா ஆலாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுத் தரப்பு இந்த 15 வயது சிறுவனுக்கு எதிராக முதன்முறையாக வலுவான ஆதாரங்களை நிரூபித்துள்ளதாக நீதிபதி அட்லின் அப்ட் மஜித் தீர்ப்பளித்தார்.
இந்தக் கொலை வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது. குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறுவர் என்பதால் இந்த நீதிமன்ற விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி, பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியின் கழிப்பறையில் அந்த மாணவரைக் கொன்றதாக இந்தச் சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 302-ன் கீழ் கொலை குற்றச்சாட்டு
சாட்டப்பட்டுள்ளது, இந்த தண்டனை விதிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகளை வழங்க வகை செய்கிறது.
இருப்பினும், 2001-ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் பிரிவு 97(1)-ன் படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட முடியாது.
அதேவேளையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கான தற்காப்புப் படையில் வழக்கறிஞர்கள் சியூ ஜீ சான், ஏஞ்சல் சூ மற்றும் யான் ஜி வெய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சுஹாகாம் அமைப்பின் சார்பில் கண்காணிப்பு வழக்கறிஞர்களாக யாஸ்மீன் ஷெரீஃப் மற்றும் ஜேசன் லிம் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
