நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டம்: டத்தாரான் காஜாங் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது 

காஜாங்:  

சிலாங்கூர் மாநில அளவிலான 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் டத்தாரான் காஜாங் சதுக்கத்தில் விமரிசையாக நடைபெறவுள்ளது. 

இப்பிரம்மாண்ட விழா வரும் 2026 ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது. அன்று மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை காஜாங் அரங்கத்தில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

வருகை தரும் பொதுமக்களுக்காகப் பல்வேறு சுவாரசியமான மற்றும் கவர்ச்சிகரமான அங்கங்கள் அங்கு காத்திருக்கின்றன.

அணிவகுப்பு மரியாதைகள், சீருடைப் படையினரின் திறனாய்வுப் படைப்புகள் மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கைகள் போன்றவை இதில் இடம்பெறவுள்ளன.

மேலும் கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டின் பிரபல கலைஞர்களின் இசைப் படைப்புகளும் மக்களை மகிழ்விக்கவுள்ளன.

இக்கொண்டாட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset