நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங் நகராட்சி மன்றத்தின் புதிய மன்ற உறுப்பினராக திருமதி தாமரைச் செல்வி பதவியேற்றார் 

காஜாங்: 

காஜாங் நகராட்சி மன்றமத்தின் புதிய மன்ற உறுப்பினராக திருமதி தாமரைச் செல்வி ஶ்ரீ ராம் ப்தவியேற்று கொண்டார். 

2026-2027 தவணைக்கான இந்த புதிய உறுப்பினரின் நியமனத்தை சிறப்பிக்கும் வகையில் காஜாங் நகராட்சி மன்ற இயக்குநர்களும் பிரிவுத் தலைவர்களும் உடனிருந்தனர்.

புதிய மன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு காஜாங் நகராட்சி மன்ற குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இந்த நியமனத்தின் மூலம் MPKj மண்டலப் பகுதி மக்களுக்கு அவரால் சிறப்பான சேவை வழங்கி அவர்களின் தேவைகளைக் கவனிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MPKj ஊழியர்களுக்கும் மன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து வலுப்பெறும் என நம்பப்படுகிறது.

முன்னதாக, காஜாங் நகராட்சி மன்றத்தின் கட்டிடத்தின் அலுவலக அறையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் காஜாங் நகராட்சி மன்றத்தின் தலைவர் நஸ்லி பின் முஹம்மத் தாயிப், துணைத் தலைவர் திரு. முகமது ஃபாரீஸ் ஆகியோர் இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset