நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சனில் துப்பாக்கி சூடு பயிற்சி: சக வீரர் சுட்டதில் ராணுவ வீரர் காயம்

போர்ட்டிக்சன்: 

சுங்கை மென்யாலாவில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்த பயிற்சியின் போது, சக வீரரால் தவறுதலாக சுடப்பட்டதில் ராணுவ வீரர் ஒருவர் முகத்தில் காயமடைந்தார்.

அந்தப் பாதிக்கப்பட்ட வீரர், பல பணியாளர்களுடன் சேர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பிற்பகல் 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வீரர் முதலில் போர்ட்டிக்சன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக இங்குள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவர் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை நெகிரி செம்பிலான் துணை காவல் துறைத் தலைவர் நாஷாருடின் ஷெரீஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணியில், விசாரணைகளுக்கு உதவுவதற்காக 20 வயதைக் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 1960 ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 37 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 337 ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset