நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரதமர் அன்வார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து நேற்று வீடு திரும்பினார்.

ஒரு முகநூல் பதிவில், அன்வர் புத்தகம் படிக்கும் தனது புகைப்படத்தை “அல்ஹம்துலில்லாஹ், வீடு திரும்பினேன்” என்ற தலைப்புடன் பதிவேற்றினார்.

முன்னதாக, பிரதமரின் மனைவி, டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில், Hernia சிகிச்சை பெற்ற பிறகு நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று கூறினார்.

திங்கட்கிழமை, தொப்புளுக்கு அருகிலுள்ள குடலிறக்கத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக, அன்வார் திட்டமிட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset