நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM103.69 மில்லியன் இழப்புகள், RM6.1 பில்லியன் கடன் குறித்த கூற்றுகள் தவறானவை: PKNS மறுப்பு

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநில அபிவிருத்திக் கழகம் (PKNS), தங்களுக்கு மொத்தம் RM103.69 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், RM6.1 பில்லியன் கடன்கள் குவிந்துள்ளதாகவும் கூறப்படும் கூற்றுகளை மறுத்துள்ளது.

கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சித்தரிக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை மட்டுமல்ல திசைதிருப்பும் தன்மை கொண்டவை என்று PKNS கூறியுள்ளது.

“இது PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலையையும் பிரதிபலிக்கவில்லை.”

“RAM Ratings நடத்திய ஒரு சுயாதீன மதிப்பீடு, PKNS வலுவான, நிலையான நிதி நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளது. RAM Ratings, PKNS-க்கு தனது AA1/Stable/P1 மதிப்பீட்டைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது,” என்று கழகம் கூறியது.

கழகத்தின் நிதிக் கட்டமைப்பு, ஒட்டுமொத்த நிதி நிலையை விளக்காமல், இழப்பையும் கடன் புள்ளிவிவரங்களையும்  தனித்தனியாகக் குறிப்பிடுவது,  உண்மைகளையும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்காத ஒரு திசைதிருப்பும் தோற்றத்தை உருவாக்குகிறது என்று PKNS கூறியது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset