நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூர்வக்குடியினரின் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரச் சிகிச்சையகங்கள் மேம்படுத்தப்படும்: துணைப் பிரதமர் அஹமத் ஜாஹித் ஹமிடி

கிரிக்: 

நாடு முழுவதும் உள்ள பூர்வக்குடியினரின் 628 குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார சிகிச்சையகங்களும் 2035-ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்டும் என்று இலக்கிடப்பட்டுள்ளது.

சமூகத்திற்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

''நிச்சயமாக சிகிச்சையகங்கள் உள்ளன. ஆனால் இந்த சுகாதாரப் பிரச்சினையில் எங்களுக்கு அக்கறை இருப்பதால் அவர்களும் சிறந்த சுகாதார சேவையைப் பெறுவதற்கான உரிமை கொண்ட மலேசியக் குடிமக்கள் ஆவர்,'' என்றார் அவர்.

இன்று பேராக், கிரிக், கம்போங் ஆயர் பனூனில் 2026–2035 ஆண்டுகான பூர்வக்குடியினர் சமூக சுகாதார நிர்ணய வியூகத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் அஹ்மாட் சாஹிட் இத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

சுகாதார அமைச்சு மற்றும் பூர்வக்குடியினர் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை செயல்படுத்த முடியும் என்று புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வியூகத் திட்டத்தின் மூலம், பூர்வக்குடியினரிடையே நோய்த் தடுப்பு மேற்கொள்ளப்படுவதையும், சிகிச்சை தொடரப்படுவதையும் உறுதி செய்வதற்கான வழிமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக டாக்டர் அஹ்மத் ஜாஹித் கூறினார்.

- பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset