செய்திகள் மலேசியா
தாபோங் ஹாஜி குறித்த தேசிய முன்னணியின் சிறப்பு விளக்கக் கூட்டம்; நாளை வரை காத்திருங்கள்: தலைவர்கள்
கோலாலம்பூர்:
மெனாரா டத்தோ ஓன்னில் இன்று மாலை நடைபெற்ற, தாபோங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்த தேசிய முன்னணியின் சிறப்பு விளக்கக் கூட்டத்திற்கு, இதில் கலந்து கொண்ட பெரும்பாலான தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்கள் கிடைத்தன.
மாலை 5 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த இந்த விளக்கக் கூட்டம், நாளை மக்களவையில் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்டது.
விளக்கக் கூட்டம் முடிந்தவுடனேயே கருத்து தெரிவித்தவர்களில், பொன்டியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் மஸ்லானும் ஒருவர்.
நன்று, என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியும் அமர்வு சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களும் கலந்து கொண்டனர்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வரை காத்திருங்கள் என்று கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
