நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைவானில் பணக் கடத்தல்காரர்களாக செயல்பட்ட மூன்று மலேசியர்கள் கைது

தைவான்:

கடந்த மாதம், தைவானின் காவோசியுங்கில் ஒரு மோசடிக் கும்பலுக்குப் பணக் கடத்தல்காரர்களாகச் செயல்பட்டதாகச் சந்தேகத்தின் பேரில் மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

18, 26, 39 வயதுடைய அந்த மூன்று ஆண் சந்தேக நபர்களும், தனித்தனியாகக் கைது செய்யப்படுவதற்கு முன்பு சுற்றுலாப் பயணிகளாகத் தைவானுக்குள் நுழைந்ததாக மத்திய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஸுயோயிங் போலிஸ் துறையினர், தபால் நிலைய  ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்தபோது உட்பட, பல இடங்களில் 18, 39 வயதுடைய சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

39 வயதான சந்தேக நபர் தபால் நிலைய ஏடிஎம் முன்பாகக் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 19,660 ரிங்கிட் ரொக்கம், இரண்டு வங்கி அட்டைகள், ஒரு கைபேசியை போலிசார் துறையினர் பறிமுதல் செய்ததாகவும் தெரியவருகிறது.

தபால் நிலைய ஏடிஎம் இயந்திரத்தின் முன்பாக, 18 வயது சந்தேக நபர் ஒருவர் 7,610 ரிங்கிட் ரொக்கம், ஒரு வங்கி அட்டை, ஒரு கைபேசியுடன் கைது செய்யப்பட்டார்.
குடிநுழைவுத் துறை, தைவான் விமானப் போக்குவரத்து போலிஸ் பணியகத்தின் ஒத்துழைப்புடன், ஜூலை மாத நடுப்பகுதியில் காவோசியுங் அனைத்துலக விமான நிலையத்தில் 26 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset