செய்திகள் மலேசியா
1 எம்டிபி வழக்கில் ஜோ லோ தான் முதன்மையான சூத்திரதாரி என்பதில் சாட்சிக்கு உறுதியில்லை
புத்ராஜெயா:
1 எம்டிபி நிதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்தில், தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ, முதன்மையான நபர் தானா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஒரு வெளிநாட்டு சொத்து மீட்பு நிபுணர் இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், க்ரோல் (கேமன்) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், க்ரோலின் வெளிநாட்டு முதலீட்டுப் பிரிவின் தலைவருமான ஏஞ்சலா பார்க்ஹவுஸ், நிதிகளைப் பெற்ற நபர்களே தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரப்பினர் என்று கூறினார்.
நீதித்துறை ஆணையர் முகமது ரெட்ஸுவான் இத்ருஸ் முன்னிலையில், முன்னாள் பிரதமர், மேலும் ஆறு பேருக்கு எதிராக 1 எம்டிபி நிறுவனம் தாக்கல் செய்துள்ள 5.64 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வழக்கின் விசாரணையின் ஐந்தாம் நாளில், டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமை வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தனது விசாரணையின் போது பார்க்ஹவுஸ் எப்போதாவது ஜோ லோவை சந்தித்திருக்கிறாரா அல்லது அந்த தொழிலதிபரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாரா என்று முகமது ஷாபி கேட்டதற்கு, அவர் "ஆம்" என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
