செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது; தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டுமே முதலிடம்: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய்
சென்னை:
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத் தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் விஜய் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, நம் உயிர், பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும். நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும். இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் அது தனி பவர்.
உலகம் முழுவதும் தெரிந்த திருக்குறள் ஒன்று போதாதா தமிழின் பெருமையை சொல்ல? தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். அரசு விழாக்களின் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என 1970இல் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ், தமிழர் பண்பாட்டுக்கு செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு தமிழ்த்தாய் வாழ்த்து.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபுத்தன்மை, அரசாணைகளின் வாயிலாக பின்பற்றப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
