செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கை திரும்பப் பெற்றார் மனைவி சங்கீதா விஜய்
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கு மனுவை அவரின் மனைவி திருமதி சங்கீதா விஜய் திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஜூன் மாதம் 15ல் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பிரபலங்கள் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கணவர் விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை, வாபஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார். அதை தொடர்ந்து, வழக்கை முடித்து வைப்பதாக, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால், புதிதாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய, சங்கீதாவுக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
