நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதிப்போட்டி இன்றிரவு: 1. ராஜு 2. பிரியங்கா 3. பவானி?

சென்னை:

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5, 100 நாள்களைக் கடந்து தற்போது முடிவடைந்திருக்கிறது. 

கடந்த 4 சீசன்களைப் போல் அல்லாமல் இந்தத் தொடர் பார்வையாளர்களை பெரிதும் கவரவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து போனது. கமலஹாசன் நோய்வாய்பட்டது. டிஆர்பி ரேட்டிங் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனது.

பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமீர், சஞ்சீவ் என இருவர் வைல்டு கார்டு வழியாக இணைந்தார்கள். அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற, இறுதியாக  அமீர், நிரூப், ராஜூ, பிரியங்கா, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றில் டைட்டில் வெல்லும் போட்டியில்  இருக்கிறார்கள்.

Bigg Boss Tamil Season 5 Highlights: Kamal Haasan asks Raju not to meddle  in Pavni's personal life - Television News

இன்று  ஷூட்டிங்கில் கடைசி நேரத் திருப்பமாக ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அதாவது இறுதிச் சுற்றிலிருந்த ஐந்து பேரில் நீருப், அமீர் இருவரும் வெளியேற்றப்பட்டார்கள். நான்கு பேர் இறுதிக்கட்டத்துக்குத் தேர்வாவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மூன்று பேர் மட்டும் இறுதியில் மிஞ்சி இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறிய எபிசோடு இன்று இரவே ஒளிபரப்பாகும்.

அதனைத் தொடர்ந்து இறுதியிலிருந்த மூன்று பேரில் முதலிடத்தைப் பிடித்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னராகி இருக்கிறார் ராஜூ என்று தகவல் வந்துள்ளது.

இரண்டாவது இடம் விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்  பிரியங்காவுக்குக் கிடைத்திருக்கிறதாம். உடல்நலக் குறைவால் வெளியே சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பிரியங்கா, இறுதிப் போட்டிக்கான ஷூட்டிங்கில் பங்கேற்று இருக்கிறார்.

மூன்றாவது இடம் இளைஞர் பட்டாளத்தைப் பெரிதும் கவர்ந்த பாவனிக்குக் கிடைத்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 

இதன் மூலம் மூன்று மாதங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5  நிறைவடைந்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset