செய்திகள் மலேசியா
5 ஆண்டுகளாக பள்ளிவாசல் நிதியைத் திருடியவருக்கு 69 மாதங்கள் சிறைத் தண்டனை
ஆயர்குரோ:
கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளிவாசல், சூராவ் நிதிகளைக் குறிவைத்துத் திருடி வந்த 37 வயது நபருக்கு, ஆயர்குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று மொத்தம் 69 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.
குற்றம் சாட்டப்பட்டவரான முஅம்மர் ராய்ட் அப்துல் மாலிக், மாஜிஸ்திரேட் நூர் ஹபிகா ராதியா ஜைனூரின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட திருட்டு, குற்றவியல் அத்துமீறல், வீடு புகுந்து திருடுதல், அடையாள அட்டையை சமர்ப்பிக்கத் தவறியது தொடர்பான ஒன்பது குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில், மதராஸா அல் ஜாரியா, சூராவ் கம்போங் பெங்கலான் லன்ஜுட், சூராவ் அல் கரீம் போன்ற பல வழிபாட்டுத் தலங்களிலிருந்து ரொக்கம், நிதிப் பணத்தைத் திருடியதாகவும், அத்துடன் அஸ்-ஷாகிரின் பள்ளிவாசல், சூராவ் அல் முஸ்தகிம், சூராவ் அன்-நயீம் ஆகிய இடங்களில் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் சித்தி நூர் அலியா சஃப்ரி கையாண்டார்.
அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் சிறைத் தண்டனை ஜூலை 18 அன்று அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
