செய்திகள் மலேசியா
பள்ளி கழிப்பறையில் பெண் ஆசிரியை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
கூச்சிங்:
பாவ் தேசிய இடைநிலைப் பள்ளியின் பெண் ஆசிரியர்களுக்கான கழிப்பறையில் ஒரு பெண் ஆசிரியை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
காலை சுமார் 8.53 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததை அடுத்து, போலிஸ் நிலையக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பாவ் மாவட்ட போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது ஹைடே ஏ ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக அப்பள்ளியில் அறிவியல், உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த அந்தப் பெண், பெண் ஆசிரியர்களுக்கான கழிப்பறையின் தரையில் படுத்த நிலையில் சுயநினைவின்றி கிடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலை சுமார் 8.15 மணியளவில் ஆசிரியர் அறையில், 54 வயதான வோங் லீ சூ என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறியபோது, அவரை கடைசியாகப் பார்த்ததாக அவரது சக ஊழியர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, பாதிக்கப்பட்டவர் இன்னும் வகுப்பிற்கு வரவில்லை என்று மற்றொரு ஆசிரியர் தெரிவித்ததால், தனது சக ஆசிரியர் பெண் ஆசிரியர்களுக்கான கழிவறைக்குள் அவரைத் தேடிச் சென்றதாக முகமது ஹைடே கூறினார்.
கழிவறைக் கதவைத் திறந்தவுடன், பாதிக்கப்பட்டவர் மல்லாந்து படுத்த நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டார்.
அதன் பின்னரே மருத்துவ உதவியைப் பெறுவதற்காக அவசர உதவி எண் தொடர்பு கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
