செய்திகள் மலேசியா
அம்பாங்கில் உதவி, நலத்திட்டங்களைச் சீரமைக்க அஸ்மான் உறுதியளித்தார்
அம்பாங்:
அம்பாங் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளரும், பிரதமரின் அரசியல் செயலாளருமான அஸ்மான் அபிடின் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் உதவி, நலத்திட்டங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
ஒவ்வொரு அரசாங்க முன்னெடுப்பும் மக்களுக்குத் திறம்படச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, இந்த முயற்சிகள் பிரதமரின் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு, தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்.
அம்பாங் நாடாளுமன்றப் பகுதியில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனக்கு அளித்த நம்பிக்கையைத் தொடர்ந்து அஸ்மான் இவ்வாறு கூறினார்.
அம்பாங் நாடாளுமன்றப் பகுதியில் உள்ள மக்களின் நலன் தொடர்பான உதவிக்கான எந்தவொரு விண்ணப்பத்தையும், உரிய ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக பிரதமரின் அரசியல் செயலாளர் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் நேற்று முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அஸ்மானின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்களின் நலனுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியும் ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
