செய்திகள் மலேசியா
இந்தோனேசிய போதைப் பொருள் கடத்தல் வழக்கைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; விமானிகளுக்கு கூடுதல் சோதனை: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
இந்தோனேசிய போதைப் பொருள் கடத்தல் வழக்கைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானிகளுக்கு கூடுதல் சோதனைக நடத்தப்படும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விமான நிலையப் பாதுகாப்பைக் கடுமையாக்குவது, மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகள், துணை விமானிகளுக்கான பின்னணி, சுகாதாரப் பரிசோதனைகளை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் மற்ற விஷயங்கள் குறித்து மேலும் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு, முழுமையான அறிக்கையை ஆய்வு செய்ய மலேசிய அதிகாரிகளுக்கு அவகாசம் தேவை.
இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்ம்
மேலும் அனைத்து குறைபாடுகளும் உடனடியாக சரிசெய்யப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார்.
முன்னதாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானி இந்தோனேசிய விமான நிலையம் ஒன்றில் போதைப்பொருட்களுடன் பிடிபட்டார்.
அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அந்த போதைப்பொருட்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
