செய்திகள் தமிழ் தொடர்புகள்
கர்நாடகத்தை தடுக்க வக்கில்லாத அரசு இது; தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்: பட்ஜெட் குறித்து உதயநிதி சாடல்
சென்னை:
தவெகவின் மாற்றம் என்பது பெயர் மாற்றம் மட்டும்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை விமர்சித்துள்ளார்.
2026-2027 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் திருத்திய பட்ஜெட்டை புதிதாக அமைந்த தவெக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி பேசியதாவது:
”100 நாள்களில் தவெக அரசின் மதிப்பெண்ணை மக்களிடம் கேட்டால் பூஜ்ஜியம் என்பார்கள். அதேபோல், இந்த பட்ஜெட்டின் மதிப்பெண்ணும் பூஜ்ஜியம். கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்த தெளிவு இல்லை.
திமுக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். தவெக ஆட்சிக்கு வரும்போது மாற்றம் வரும் என்றார்கள். ஆனால் பெயர் மாற்றம் மட்டும்தான் செய்துள்ளார்கள். அனைத்து திட்டங்களிலும் பெயர் மாற்றியுள்ளார்கள்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக மற்ற முதல்வர்களைப் போன்று தற்போதைய முதல்வரும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
தாய்மாமன் திட்டம் மட்டும்தான் நிறைவேற்றியுள்ளார்கள். அதுவும் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் எனக் கூறிவிட்டு, தற்போது அரசு மருத்துவமனையில் பிறந்தால் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம் என பட்ஜெட்டில் குறிப்பிட்டு நிதியமைச்சர் பேசினார். திமுகவின் சாதனையை இப்போதாவது ஒப்புக் கொண்டதற்கு முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் நன்றி.
அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம், அயலக உதவித் தொகை திட்டம் என அனைத்தும் திமுக கொண்டு வந்தது. தற்போது பெயரை மாற்றி அவர்களின் கட்சிப் பெயரான ”வெற்றி” சேர்க்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் பெயரை மாற்றி வெற்றி வீடு திட்டம் என மாற்றியுள்ளார்கள். முதல்வர் படிப்பகத்தை டிஜிட்டல் நூலகம் என மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் நிதி இந்த முறை குறைக்கப்பட்டுள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தை தடுக்க அரசுக்கு வக்கில்லை, தைரியம் இல்லை.
தஞ்சாவூரில் விவசாயிகள் பிரச்னை குறித்து பேசியதற்காக வீடு புகுந்து என்னை கைது செய்தார்கள். எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவும், விவசாயிகள் போராட்டத்தை திசைத்திருப்பும் நோக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
தவெக ஆட்சியில் உள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை திசைத்திருப்புவதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியது போன்று செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2026, 4:09 pm
மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 4:05 pm
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
August 5, 2026, 3:59 pm
அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ. 131 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 6:51 am
“இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன்”: உதயநிதி விளக்கம்
August 4, 2026, 5:46 pm
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
August 4, 2026, 5:09 pm
