செய்திகள் மலேசியா
கருத்தும் கவியுடன் ஆனந்த யாழை மீட்டுகிறாய் இன்னிசை விழா; கவிஞர் நா. முத்துக்குமாருக்கான சமர்ப்பணம்: டாக்டர் வீரமோகன்
பெட்டாலிங்ஜெயா:
கருத்தும் கவியுடனான ஆனந்த யாழை மீட்டுகிறாய் இன்னிசை விழா கவிஞர் நா. முத்துக்குமாருக்கான சமர்ப்பணமாக அமையவுள்ளது.
ஐ முழக்கம் தமிழ் இலக்கிய அமைப்பின் தலைவரும் ஏற்பாட்டாளருமான முனைவர் வீரமோகன் இதனை கூறினார்.
இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியத்தின் ஆமீது நாட்டத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இசையினூடே ‘கருத்தும் கவியும்’ இன்னிசை விழா அமையவுள்ளது.
2000ஆம் ஆண்டு தொடங்கி தாம் இறக்கும்வரை எண்ணற்ற கவிதைகளையும் தமிழ்த்திரையிசைப் பாடல்களையும் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கிச் சென்ற கவிஞர் நா.முத்துக்குமாருக்கு இந்நிகழ்ச்சி ஒரு சமர்ப்பணம் ஆகும்.
இன்னிசை மூலமாக கவிதை இலக்கியத்தை இளைஞர்களுக்குக் கடத்துதல், திரையிசை இலக்கியத்தின் மூலமாக இளைஞர்களைக் கவிதைப் படைக்கும் திறன் நோக்கி நகர்த்துதல், இடைநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்க மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுதல், சமகாலத்தில் இலக்கியமும் இன்னிசையும் இணையும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியை வடிவமைத்தல் ஆகியவை இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சிக்குத் திரையிசைக் கவிஞர் சினேகன் நா. முத்துக்குமாரின் நினைவலைகளையும், பாடல் வரிகளையும், ருசிகரமான தகவல்களையும் நம்மோடு பகிர வருகின்றார்.
மலேசிய நாட்டில் தமிழுக்கும் சமயத்திற்கும் தூணாக விளங்கும் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்றவுள்ளார் என்று முனைவர் வீரமோகன் கூறினார்.
இதனிடையே இம்மாபெரும் விழா வரும் செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பத்துகேவ்ஸ் செங்கா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இன்றைய இளைஞர்களிடம் இலக்கியம் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை எனும் ஆதங்கம் எல்லோரிடமும் உள்ளது.
இன்றைய இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த காலஞ்சென்ற கவிஞர் நா.முத்துக்குமாரையும் அவரது கவிதை, பாடல்களையும் இன்னிசையோடு கொண்டாடுவதன் வழி நிச்சயம் ஒரு மிகப் பெரிய இலக்கியப் புரட்சியை இளைஞர்களிடையே கொண்டு வர முடியும்.
அதே வேளையில் இடைநிலைப் பள்ளிகளில் இலக்கியம் பாடம் எடுக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், படிவம் ஐந்து, ஆறு இலக்கியம் எடுக்கும் மாணவர்களுக்குஇந்நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச நுழைவுச்சீட்டும் வழங்குகிறோம்.
எனவே மாணவர்கள் உடனடியாக எங்களை அழைத்து உங்கள் டிக்கெட்டை உறுதிப்படுத்துங்கள் என்று மற்றொரு ஏற்பாட்டாளரான விஜயராணி கூறினார்.
இசையமைப்பாளர் ஜெய் தலைமையிலான"JOM KIDS BAND"
அறிவிப்பாளர் ‘Tik Tok’ புகழ் கவிஞர் அருள்செல்வனிம்
கவிதைச் சாரலோடும், கான மழையோடும் நனைய வாருங்கள் என்று அவர் கூறினார்.
இன்னிசை விழாவிற்கான டிக்கெட்டுகளுக்கு 0111638 6959, 01155512444 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அதே வேளையில் மாணவர்களுக்கான இலவச டிக்கெட்டுகளுக்கு மாலாவை 011-6146 1866 தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
