செய்திகள் மலேசியா
டெங்கில் ஆலயத் தலைவர் அத்துமீறல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்
ஷாஆலம்:
நிலத்தகராறில் ஈடுபட்டிருந்த டெங்கிலில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவரை, குற்றவியல் அத்துமீறல் குற்றச்சாட்டிலிருந்து ஷாஆலம் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
கடந்த பிப்ரவரி 9 அன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து வாதிட்ட 49 வயதான எம். பரமகுரு மீதான குற்றச்சாட்டை நீதிபதி ஹஸ்லினா ஹுசைன் தள்ளுபடி செய்தார்.
பரமகுருவின் வழக்கறிஞரின் கூற்றுப்படி, குற்றம் புரியும் தெளிவான நோக்கம் அவருக்கு இருந்தது என்பதை குற்றப்பத்திரிக்கை நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி கண்டறிந்தார்.
மேலும், குற்றச்சாட்டுகளில் சரிசெய்ய முடியாத நிரந்தரக் குறைபாடுகள் இருந்ததால், முழுமையான விசாரணையைத் தொடர்வது நேர விரயம் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
பரமகுரு சார்பில் வழக்கறிஞர்கள் லத்தீஃபா கோயா, ராஜேஷ் நாகராஜன் ஆஜரானார்கள்.
அதே சமயம் துணை அரசு வழக்கறிஞர் ஹேக்கல் இஸ்மாயில் அரசுத் தரப்புக்காக வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
