செய்திகள் மலேசியா
காஜாங் எம்ஆர்டி நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது சிவப்பு சாயம் வீசப்பட்ட சம்பவம்
காஜாங்:
காஜாங் எம்.ஆர்.டி நிலையம் அருகே கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது சிவப்பு சாயம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர், உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசுஃப் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 8.29 மணியளவில் புகார் தங்கள் தரப்புக்குப் புகார் ஒன்று கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் பணிக்கு செல்வதற்காக காலை 6 மணியளவில் தனது பெரோடுவா மைவி காரை எம்ஆர்டி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சென்றார்.
மாலை சுமார் 6 மணியளவில் திரும்பி வந்தபோது, தனது காரின் வலது பக்க கண்ணாடியில் சிவப்பு பெயிண்ட் இருப்பதை அவர் கண்டறிந்தார்.
இந்தச் செயலை பொறுப்பற்ற நபர்கள் மேற்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 427இன் கீழ் சொத்துச் சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றச்செயலாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், விசாரணை அதிகாரி அல்லது காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையக (IPD Kajang) கட்டுப்பாட்டு அறையை 03-8911 4222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று நாஸ்ரோன் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
