நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜி RCI விசாரணை: முன்னாள் CEO, CFO அதிகாரிகளை எம்.ஏ.சி.சி கைது செய்தது 

பெட்டாலிங் ஜெயா: 

தபோங் ஹாஜி RCI விசாரணை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியையும் முன்னாள் தலைமை நிதியக அதிகாரியையும் கைது செய்தது 

68 மற்றும் 60 வயதுடைய அந்த இரு சந்தேக  நபர்களும், இரண்டு தோட்ட நிறுவனங்களின் பங்குகளை 370 மில்லியன் ரிங்கிட் மதிப்பிற்கு வாங்கியதில் தங்களது பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் புத்ராஜயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் உறுதிப்படுத்தினார். 

2009ஆம் ஆண்டு எம்.ஏ.சிசி சட்டத்தின் செக்‌ஷன் 23இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset