நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு இல்லத்தில் ஆடவர் மரணம்: ஐந்து சந்தேக நபர்கள் கைது 

ஈப்போ: 

ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானில் அமைத்துள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஆடவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் போலிஸ் தரப்பு ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பராமரிப்பாளரும் அடங்குவார் என்று பேராக் மாநில போலிஸ் தலைவர் அல்வி சைனால் அபிடின் கூறினார். 

பாதிக்கப்பட்ட ஆடவரின் உடலில் காயங்கள் கண்டறியப்பட்ட நிலையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

சம்பவத்திற்கான சரியான காரணத்தையும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கையும் கண்டறிய நாங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302, கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset