நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபியின் மீட்கப்பட்ட சொத்துக்கள், கோரப்பட்ட 24 பில்லியன் ரிங்கிட்டை தாண்டி, 31.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளன: ஷாபி

கோலாலம்பூர்:

1 எம்டிபி நிதியிலிருந்து 31.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.

இது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிரான வழக்கில் அந்நிறுவனம் கோரிய 24 பில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாகும்.

டத்தோஸ்ரீ நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டாக்டர் முஹம்மது ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

இந்த விவகாரம் ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் முன்னாள் பிரதமரின் சட்டக் குழுவினர் பல மனுக்களைச் சமர்ப்பித்த பின்னரே இது வெளிப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1 எம்டிபி 24 பில்லியன் ரிங்கிட்டை கோருகிறது.

மேலும் இதுவரை மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 31 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது. 

1 எம்டிபியின் நிதியை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரே மீட்பு நடவடிக்கை இதுவல்ல.

1 எம்டிபியின் சொத்துக்கள் விற்கப்பட்டால், அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக 40 பில்லியன் ரிங்கிட் கிடைக்கும்.

இதன் மூலம் மொத்தத் தொகை 71 பில்லியன் ரிங்கிட்டாக உயரும். 

அப்படியென்றால், 1எம்டிபி திவாலாகிவிட்டது. அதனிடம் பணமில்லை என்று யார் சொன்னது?.

நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், 1 எம்டிபியிடம் ஏற்கெனவே அதைவிட அதிகமான பணம் இருக்கும்போது, ​​அவர்கள் சொத்து மீட்பு மூலம் மீட்க முயற்சிக்கிறார்கள் என்று அவர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset