நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு அர்மேனியன் சாலையில் கரையான் அரித்ததால் கட்டிடம் சரிந்து விழுந்தது: இரண்டு இலங்கை சுற்றுலாப் பயணிகள் காயம்

ஜார்ஜ் டவுன்:

இங்குள்ள அர்நேனியன் சாலையில் உள்ள ஒரு பாரம்பரியக் கடை வீட்டில் இன்று ஏற்பட்ட கட்டமைப்புச் சரிவுக்குக் கரையான் அரித்த மரத் தூண்களே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்தச் சரிவில் இரண்டு இலங்கை சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

மாநில உள்ளாட்சி, நகர, கிராம திட்டமிடல் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜேசன் ஹங் மூய் லாய், 

கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு அதன் மர தூண்கள் கரையான்களால் சேதமடைந்திருந்ததை ஆய்வில் கண்டறிந்ததாகக் கூறினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பராமரிப்பு அதன் உரிமையாளரின் பொறுப்பாக உள்ளது.

இருந்தாலும், அப்பகுதியில் கரையான் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முன்முயற்சி எடுக்குமாறு பினாங்கு மாநகர மன்றம் தனது கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இப்பகுதி பாரம்பரியத் தல அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனால் கட்டிடம் இன்னும் தனியாருக்குச் சொந்தமானது.

எனவே, அந்தந்த கட்டிடங்களின் பராமரிப்புக்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.

இது கட்டிட உரிமையாளரின் பொறுப்பாக இருந்தாலும், இந்த பாரம்பரியப் பகுதி ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதால், கரையான் கட்டுப்பாட்டை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புமுன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset